தோற்றம் : 1996

பொன்மொழி :

“ பெண்மை வெல்க ”


கொள்கைகள் :


  • நலிவடைந்த கிராமப்புற பெண்களுக்கு நல்வாழ்வு அளித்தல்
  • கைத்தொழில் கற்றுக்கொடுத்தல்
  • கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தல்
  • சுயதொழில் ஏற்படுத்திக்கொடுத்தல்
  • ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுதல்
  • இலவச மருத்துவ ஆலோசனைகள் ஏற்படுத்தக் கொடுத்தல்

2014 - 2015


சுதந்திர தினக் கொண்டாட்டம்
15.08.2014
22 பேர் கொண்ட பெண்கள் குழு மற்றும் பேராசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 24 பேர் கல்லூரியிலிருந்து பி.ஆர்.எஸ்.மஹாலுக்குச் சென்று அங்கு, பெண்கள் குழு சார்பாக கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினர். அன்றைய தினம் மிகவும் சிறப்பானதாக அமைந்தது.
மருத்துவ முகாம்
காரைக்குடி ரோட்டரி சங்கமும், ஆரோக்கியா மருத்துவமனையும் இணைந்து 14.09.2014 அன்று பெண்ணியக்குழு தலைவர், செயலாளர் உட்பட 15 மாணவிகள் தாதைகளாக (செவிலியர்) இருந்து செயல்பட்டனர்.
உலக மகளிர் தினம்
10.03.2015 அன்று மகளிர் தின நிகழ்ச்சிக்காக மாணவிகளும,; பேராசியர்களும் தேவகோட்டையில் உள்ள மகளிர் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிய, கல்லூரியிலிருந்து மாணவிகள் 55 பேர் சென்றனர். அவ்விழாவில் பேராசிரியர் திருமதி வி.ச.ஈஸ்வரி அவர்களுக்கும் திருமதி கா.வைரலெட்சுமி அவர்களுக்கும் பொன்னாடை பேராசிரியர்களால் போர்த்தப்பட்டது. திருமதி கா.வைரலெட்சுமி அவர்கள் ‘பெண்கல்வி’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரி நிர்வாகம் சார்பாக அருட்சகோதரி மெல்டிந்தா மேரி, அருட்சகோதரி ஜெபா, அருட்சகோதரி வித்யா ஷீபாராணி, அருட்சகோதரி பிரிசில்லா மேரி ஆகியோர்கள் மற்றும் மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

2015 - 2016


13.07.15 அன்று இதயா மகளிர் கல்லூரியின் பெண்ணியக்குழுவின் இவ்வாண்டிற்கான முதல் கூட்டம் 90 மாணவிகளைக் கொண்டு 11:30 மணியளவில் இறையாசீர் கிடைக்க வேண்டி அவரவர் இறைவேண்டல் மூலம் இனிதே ஆரம்பமானது.
இக்கூட்டத்தில் பெண்ணியத்தின் தன்மைகள், சென்றாண்டில் செய்யப்பட்ட செயல்பாடுகள் அவற்றின் மத்தியில் மாணவிகளுக்குல் ஏற்பட்ட அனுபவம் பற்றி கலந்;துரையாடல் செய்யபட்டது.
இனிவரும் இவ்வாண்டிற்கான செய்பாடுகளில் பெண்ணியக் குழுவின் மூலம் ஒவ்வொருவரின் பங்களிப்பானது எவ்வாறு அமைய வேண்டும் என்று கலந்தாலோசனை செய்யப்பட்டது. அதன் பின்பு 12.45 மணியளவில் கூட்டமானது சிறிய பிராத்தனையுடன் இனிதே நிறைவு பெற்றது.
சுகாதார விழிப்புணர்வு
22.07.15 அன்று பெண்ணியக் குழுவின் மூலம் கோபாலபுரம் சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இக்குழுவின் செயலாளர் பிஸ்மில்லாபர்வின் மற்றும் துணைச் செயலாளர் எஸ். கோமளா தலைமையில் 11 மாணவிகள் சென்று மக்களைச் சந்தித்தனர்.
10:30 மணியளவில் அக்கிராமத்தில் உள்ள 40 மகளிரை ஒன்று திரட்டி அருகில் உள்ள வேம்பு மரத்தடியில் கூடச் செய்து இறைவணக்கத்துடன் அன்றைய கூட்டமானது இனிதே ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து மாணவிகள் மக்களைச் சந்திக்க வந்த நோக்கத்தினை எடுத்துக் கூறிய பின்பு, இன்றைய இயற்கைச் சூழலினையும் அதற்கேற்ப மக்களின் வாழ்வு முறைகள், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதன் மூலம் உடல் நலம் பேணுதல் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் கொசுக்கடியினால் ஏற்படும் நோய்கள் குறித்தும், கொசுக்கள் உருவாகாமல் இருக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இக்கூட்டத்தின் வாயிலாக அங்கு கூடியிருந்த மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் பெண்களுக்கு மாதவிடாயின் போது பேன வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மொழியப்பட்டது. சுமார் இரண்டு மணிநேரம் அம்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்பு, பெண்ணியக் குழுவின் உறுப்பினர் எஸ்.கௌரி நன்றி நவில 12.30 மணியளவில் கல்லூரிக்குத் திரும்பினர்;.
அன்றைய தினம் பெண்ணியக் குழுவின் மீதமுள்ள உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பெண்ணியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.அ.சேவியர்ராணி பெண்ணியக் குழுவிற்கென ஒதுக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்தனர்.
லெவே இல்ல முதியோரைச் சந்தித்தல்
15.10.15 எழுச்சியின் வீரன், ஏவுகனை நாயகன் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளன்று பெண்ணியக் குழுவைச் சார்ந்த மாணவிகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தல் என்ற முறையில் கலந்தாலோசனை செய்து, அதன்படி அருகிலுள்ள லெவே முதியோர் இல்லம் சென்று உதவுதல், சந்தித்தல் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் படி அன்றைய தினம் பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி.அ.சேவியர்ராணி (தமிழ்த்துறை) தலைமையில் பிற்பகல் 1 மணியளவில் ஆரோக்கியா மருத்துவமனை அருகிலுள்ள லெவே முதியோர் இல்லம் சென்று அங்குள்ள முதியோர்களைச் சந்தித்து, ஒவ்வொருவருடைய நலன்முறைகள் பறறி விசாரித்து அவர்களைப் பற்றி தகவல்களைத் தெரிந்து கொண்டனர்.
அதன் பின்பு முதியோர்கள் தங்கியிருந்த அறைகளை சுத்தம்செய்தல், கூட்டுதல், கழுவுதல், உடைகளை மடித்துவைத்தல், மேலும் இரு நபர்களுக்கு உடைகளை துவைத்தல் போன்ற சிறு சிறு வேலைகளை மாணவிகள் செய்தனர்.
அவ்வாறே ஆண்கள் (முதியோர்கள்) தங்குமிடம் சுத்தம் செய்யப்பட்டு நலன் விசாரிக்கப்பட்டது. அதன் பின்னர் பெண்ணியக் குழுவினரால் வாங்கிச் செல்லப்பட்ட பழங்கள் மற்றும் சிற்றுண்டிகளை ஒவ்வொருவருக்கும் வழங்கிய பின்னர் 3 மணியளவில் ஒருவித மன சுமையும், மன அமைதியோடும் கல்லூக்குத் திரும்பினார்கள். இனி தங்களின் வாழ்க்கையில் முதியோர்களை எவ்விதத்தில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டனர்.
மகளிர் தின விழா
08.03.16 அன்று இதயா மகளிர் கல்லூரி சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டமானது காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இறை வணக்கத்துடன் குத்துவிளக்கேற்றி இனிதே ஆரம்பமானது. அவ்விழாவில் செல்வி ஷீலா.எம்.எஸ்.டபில்யூ.(சமூக ஆர்வலர்) அவர்கள் தலைமை தாங்கி, ‘இளைஞனும் மதுபோதையும்’ என்ற தலைப்பில் எழுச்சி உரையாற்றி குறும்படம் காண்பிக்கப்பட்டது. மூன்றாமாண்டு மாணவிகள் முதல் அமர்வில் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்கள் மாணவிகளிடம் நாம் இவ்வுலகத்தினை நோக்கும் கண்ணோட்டம் தான் அம்மனிதனை நல் வழியிலும் தீய வழியிலும் அழைத்துச் செல்லும்மென்றும், இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கடவுளின் குழந்தைகள் என்றெண்ணி பணிவிடை செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறினர்.
பிற்பகல் 2 மணியளவில் இரண்டாம் அமர்வு நடைபெற்றது. அவ்விழாவில் அருட்தந்தை, பாக்கிய நாதன் (மருத்துவ நிபுணர்) மற்றும் அருட்சகோதரி. மேரி டென்னிஸ் (மாநில அளவில் சமூகம் மற்றும் நற்செய்திப்பணி அலோசகர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அருட்சகோதரி.மேரி டென்னிஸ் அவர்கள். தனது சிறப்;புரையில் ‘பெண் சக்தி ஒரு மாபெரும் சக்தி’ என்பதை மாணவிகளின் மத்தியில் பதிவு செய்ததோடு மட்டுமல்லாது விழிப்புணர்வுப் பாடல்களையும் பாடி மாணவிகளை ஊக்கப்படுத்தி மகிழ்வித்தார்.
சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் விதமாக பெண்ணியக்குழுவின் ஒருங்கிணைப்பாளர். திருமதி.அ.சேவியர்ராணி (தமிழ்த்துறை) அவர்கள் வரவேற்புரை நல்கினார். அதனைத் தொடர்ந்து விருந்தினர்களைக் கௌரவிக்கும் விதமாக கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி.ஜாஸ்மின் அவர்கள் பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.
அருட்தந்தை அவர்கள் தனது சிறப்புரையில் ‘பெண்களின் மேன்மை குறித்தும், பெண் சக்தியின் மேன்மை’ குறித்தும் நடைமுறை வாழ்க்கையின் முறையின் வழியாக எடுத்துக் கூறினார்.
இவ்விழாவினை ஆரோக்கியா மருத்துவ மனையின் தலைவி, அருட்சகோதரி.வேலன்டின்னா அவர்கள், நமது கல்லூரியின் முதலவர் அருட்சகோதரி.ஜாஸ்மின் அவர்களோடு இணைந்து சிறப்பான முறையில் ஏற்று நடத்தினார்.
இந்நிகழ்வு இனிதே நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாணவி செல்வி.மணிமேகலை நன்றியுரை நல்கினார். இறுதியாக கல்;லூரிக்கீதம் இசைத்து விழா இனிதே நிறைவு பெற்றது.

 

2016 - 2017


தைராய்டு விழிப்புணர்வு
16.07.2016 அன்று காலை 9.30 மணியளவில் இதயா மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தைராய்டு முகாமில் கலந்து கொண்டு இரத்தப்பரிசோதனை செய்து கொண்டனர்.
அதன்பின்பு பிற்பகல் 12.00 மணியளவில் சொக்கநாதபுரம் போரடைப்பு. நாமத்தி மற்றும் கோபாலபுரம். சருகணி ஆகிய கிராம மக்களைச் சந்தித்து தைராய்டு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. அச்சமயம் உணவு உட்கொள்ளும் முன்பு இரத்தம் எடுத்து பரிசோதனை செய்யவேண்டியுள்ளதால் ஒரு நாள் அனைவரும் ஒன்று கூடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
இரத்த அழுத்தம் பரிசோதனை
06.08.2016 அன்று காலை 10.00 மணியளவில் நியூராஜ் இரத்தப் பரிசோதனை நிலையத்திலுள்ள இரண்டு செவிலியர்களை அழைத்துக் கொண்டு சருகணி மக்களைச் சந்தித்து இரத்த அழுத்தம,; இரத்தப் பரிசோதனை இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது.
இச்சமயம் தைராய்டு பரிசோதனை பற்றி மீண்டும் எடுத்துக் கூறி தைராய்டு பரிசோதனை செய்து கொள்வதின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் உள்ள நபர்களைப்பற்றி விசாரித்து தைராய்டு மருந்துகள் யாரேனும் உட்கொள்கிறார்களா? என்ற கணக்கு எடுக்கப்பட்டது. இருவர் குடும்பத்தில் தைராய்டு மருந்து உட்கொள்கிறார்கள்.
மரக்கன்றுகள் நடுதல்
14.10.2016 அன்று பிற்பகல் 2 மணியளவில் காளையார் கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இதயா மகளிர் கல்லூரியில் இருந்து பெண்ணியக் குழுவின் சார்பாக 15 மாணவிகள் 22 மரக்கன்றுகளை, ஏவுகனை தந்த இனிய நாயகனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திதன் முதல்வர். முனைவர். திரு.ஞானசம்பந்தம் அவர்கள் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டனர்.
அச்சமயத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு 34 மாணவிகள் மற்றும் விரிவுரையாளர்கள், அப்பயிற்சி நிறுவனத்தின் நாட்டு நலப்பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர், அலுவலகப்பணியாளர்களும், இதயா கல்லூரி 15 மாணவிகளும் பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர், அ.சேவியர்ராணி அவர்களும் மரம் நடும்பணியில் கலந்து கொண்டனர்.

இலக்கு பெண்கள் விழிப்புணர்வு முகாம்
09.09.2016 அன்று காலை 10:30 மணியளவில் இதயா மகளிர் கல்லூரின் மேலாண்மைக் கட்டிட வளாகத்தில் இலக்குப் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அம்முகாமில் சருகணி, கோபாலபுரம், நாகமத்தி, வெள்ளிகட்டி ஊராட்சி ஒன்றிய மக்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றக் கூடிய அருட்தந்தை.பில்மின்ராஜ் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடம் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் வினவப்பட்டு அப்பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் பற்றி எடுத்துக் கூறினார்.
மேலும் இலக்குப் பெண்கள் தங்கள் குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு முறை, உறவினரை சமாளித்தல போன்ற செய்திகளை சாய்மொழியாக கேட்டறிந்து குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், அதனை சமாளித்த முறைகள் பற்றி கேட்டறிந்தார். மேலும் சமூகத்தின் மூலம் ஏற்படும் பிரட்சனைகளை சட்டரீதியாக சந்திப்பது பற்றி எடுத்து விளக்கினார்.
அதன் பின்பு மதுரை குழந்தையேசு மாநிலத் தலைவி அருட்சகோதரி.பிர்மினா மேரி அவர்களும் தாய்மையின் மேன்மை பற்றி விளக்கினர். அம்முகாமில் சமூக ஆர்வலர் அருட்சகோதரி.டென்னிஸ் அவர்களும், இதயா கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி. முனைவர். ஜாஸ்மின்தங்ககுமாரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர். திருமதி.அ.சேவியர்ராணி அவர்கள் நன்றி நவில, மதிய உணவு முகாமில் கலநது கொண்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது.

இலக்குப் பெண்கள்; வறுமையுற்றோர் கணக்கெடுத்தல்
11.01.2017 அன்று கோபாலபுரம, நாகமத்தி கிராமங்களில் கணவரை இழந்து, வறுமையில் வாழ்வை நடத்தக் கூடிய பெண்களை தேர்வு செய்யும் பொருட்டு, குடும்பங்களை சந்தித்து குடும்பச் சூழ்நிலைகளை தெரிந்து கொண்டோம். அவர்களில் கோபாலபுரத்தைச் சேர்ந்த திருமிகு. ஜெஸிந்தா அவர்களும், திருமிகு. முத்து அவர்களும், நாகமத்திக் கிராமத்தைச் சேர்ந்த திருமிகு. கலா அவர்களும், தேர்வு செய்யப்பட்டனர்.
இலக்குப் பெண்களில் வறுமையுற்றோர் கணக்கெடுத்தல்
அவ்வாறே போரடைப்பு, வெள்ளிக்கட்டி, கிராமங்களில் கணவரை இழந்து, வறுமையில் வாழ்வை நடத்தக் கூடிய பெண்களை தேர்வு செய்யும் பொருட்டு, குடும்பங்களை சந்தித்துக் குடும்பச் சூழ்நிலைகளை தெரிந்து கொண்டு கீழ்கண்ட நபர்களை தேர்வு செய்தோம். போரடைப்புக் கிராமத்தைச் சேர்ந்த திருமிகு.நாடியம்மாள், திருமிகு. கோகிலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

உலக மகளிர் தின விழா
“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மா” என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் வாக்கிற்கிணங்க பெண்களாய்ப பிறந்து சாதனை படைத்திடத்துடிக்கும் மாணவிகளைக் கொண்ட நம் இதயா மகளிர் கல்லூரியின் உலக மகளிர் தின விழாவானது 08.03.2017 அன்று காலை 10 மணியளவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அவ்விழாவில் சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியின்; தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர்.க.கண்மணி அவர்கள் தலைமை தாங்கினார். முனைவர். ரா.விஜயலஷ்மி அவர்கள் வரவேற்புரை நல்கினார். இதயா மகளிர் கல்லூரியின் முதல்வர். அருட்சகோதரி. ஜாஸ்மின் தங்கக்குமாரி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.
அதன் பின்பு பெண்ணியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.அ.சேவியர் ராணி அவர்கள் 2016-2017 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு ஆண்டறிக்கையை வாசித்தார். அதன் பின்பு கலை நிகழ்ச்சிகளுடன் அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர். தனது எழுச்சி உரையில் தற்கால மகளிர் நிலை குறித்தும், ஒரு சில மாவட்டங்களில் முன்பு உள்ள காலங்களில பெண்கள் இழிவாக நடத்தப்பட்ட முறைகள் பற்றியும் சிறப்போடும் துடிப்போடும் எடுத்துக் கூறினார்.
உரை நிகழ்வினைத் தொடர்ந்து இதயா கல்லூரியின் பெண்ணியக் குழுவின் சார்பாக சருகணி, வெள்ளிக்கட்டி, கோபாலபுரம, நாகமத்தி, கிராமத்தைச் சேர்ந்த இலக்குப் பெண்கள் (விதவைகள்) தென்னம்பிள்ளைகள் சிறப்பு விருந்தினர் முனைவர்.க.கண்மணி மூலம் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கணவனை இழந்து வறுமையில் குடும்பங்களை நிர்வகிக்கும் ஐந்து இலக்குப் பெண்களின் குடும்பங்களை தேர்வு செய்து வாழ்வாதாரமாக ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு ஆடுகள் (1பெட்டை, 1கிடாய்) வீதம் 10 ஆடுகள் வழங்கப்பட்டன. இதனை சிவகங்கை மறைமாவட்டப் பொருளாளர் அருட்தந்தை, மைக்கேல்; ராஜ் அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது சருகணி பங்குத்தந்தை.அம்புரோஸ் அடிகளாரும், இயேசுவனம் நிர்வாகி அருட்தந்தை, குழந்தைச் சாமி அவர்களும் மான்ஸ் போர்டு அருட்சகோதரர்களும், இதயா மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் அருட்சகோதரி.மரியஜோஸ் பின் அவர்களும், அருட்சகோதரிகளும், பேராசிரியர்களும், மாணவிகளும், அலுவலகப் பணியாளர்களும் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக கல்லூரிக் கீதம் இசைக்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது.

 

2017 - 2018


பெண்ணியக்குழு செயல்பாடுகள்
“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொழுத்துவோம்”
என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் விதமாக ‘எழுந்துவா இளைய சமூதாயமே’ என்ற உயரிய நோக்ககோடு இதயா மகளிர் கல்லூரியின் பெண்ணியக் குழுவின் சார்பாக 20.07.17 அன்று மதியம் 1.45 மணியளவில் இளம் பெண்களுக்கான பிரச்சனைகளும் அவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வழிமுறைகளும் பற்றி விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலாவதாக இறைவணக்கம் பாடப்பட்டது. ஆங்கிலத்துறை மாணவி ஆனந்தி வரவேற்புரை நல்க, அதனைத் தொடர்ந்து, எமது கல்லூரி முதல்வர் அருட்சகோதரி, ஜோதிமேரி அவர்கள் துவக்க உரையாற்றினார். எமது கல்லூரி முதல்வரைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர். எம்.சொர்ணலிங்கம் அவர்கள் பெண்கள் எவ்விதங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் சட்டத்;தின் பிடியில் ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது போன்ற செய்திகளை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர் எஸ்.குமார் அவர்கள் பேசுகையில் கல்லூரிகளில் ஏற்படும் ‘ராகிங்’ பற்றியும், சட்டரீதியாக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவிகளிடையே கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதன் பின்பு சட்ட ஒழுங்கு நிர்வாக உதவியாளர் திருமதி .எம்.மணிமேகலை அவர்கள் கூறுகையில் சட்டரீதியாகத் தேவைப்படும் எவ்வித உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். அவர்களை அணுகும் முறைகள் பற்றியும், அலைபேசி எண்ணும் வழங்கினார்.
அந்நிகழ்வில் எமது கல்லூரியின் முதல்வர் மற்றும் தேவகோட்டை வட்ட இலவச சட்டப்பணிக்குழு அரசு வழக்கறிஞர். எம்.சொர்ணலிங்கம், வழக்கறிஞர்.எஸ்.குமார் மற்றும் சட்ட ஒழுங்கு நிர்வாக உதவியாளர். திருமதி.எம்.மணிமேகலை சட்டம் சார்ந்த தன்னார்வத் தொண்டு ஆர்வலர் எஸ்.வெற்றிச் செல்வன் பி.எல்.பி.ஆகியோர் கலந்து கொண்டனர்.
எமது கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகள் மற்றும் பெண்ணிக்குழு மாணவிகள் சுமார் 380 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளார். திருமதி .அ.சேவியர் ராணி அவர்கள் நன்றி நவில 3.15 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
கல்லூரியின் வளாகம்-தூய்மை செய்தல்
“கந்தையானாலும் கசக்கிக் கட்டு
கூழனாலும் குளித்துக் குடி”
‘சுத்தம் சுகம் தரும்’
‘வரும்முன் காப்போம்’- என்ற வரிகளைப் போன்று சுத்தம் செய்தால் இம்மாத செயல்பாடு என்று எண்ணி கல்லூரி வாளகத்தில் முன் பகுதியை பெண்ணியக்குழுவின் சார்பாக செப்டம்பர் 26.09.17 அன்று சுத்தம் செய்தோம்.
அச்சமயம் கல்லூரியின் முன் பகுதியை சுமார் 50 மாணவிகள் பிற்பகல் 2 மணியளவில் சுத்தம் செய்தனர். அதன் பின்பு அடுத்த மாத செயல்பாடாக ஆரோக்கியா நகர் லெவே முதியோர் இல்லம் செல்லுதல் என்று முடிவு செய்த பின்பு பிற்பகல் 3.20 மணியளவில் கலைந்து சென்றனர்.
தைராய்டு விழிப்புணர்வு
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற வரிகளைப் போன்று 14.12.2017 அன்று நம் இதயா மகளிர் கல்லூரியின் வெளி அரங்கில் பெண்ணியக் குழுவின் சார்பாக தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பரிசோதனையில் பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு 24 நபர்கள் தைராய்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
வாக்காளர் தினம்
25.01.2018 அன்று வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்துறைத் தலைவி திருமதி.கா.வைரலெட்சுமி அவர்கள், இந்தியக் குடிமகளும் அவர்களின் கடமைகளும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு செய்திகளை மாணவிகளிடையே எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தின் போது ரோட்டரி கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.மெர்ஸி, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஜோஸ்பின் அருள் ஜோதி, மற்றும் நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இலக்குப் பெண்கள் கணக்கெடுப்பு
10.01.2018 மற்றும் 24.02.2018 ஆகிய இரண்டு நாட்கள் பெண்ணியக்குழுவிலிருந்து, ஒருங்கிணைப்பாளர் திருமதி.அ.சேவியர்ராணி மற்றும் பெண்ணியக்குழு செயலாளர் ஜெயஸ்ரீ மற்றும் டென்னிசியா, மணிமேகலை, நிவேதா, ஜெனிபர் ஆகியோர் கோபாலபுரம், போரடைப்பு, நாகமத்தி கிராமங்களில் உள்ள இலக்குப் பெண்களில் மிகவும் நலிவுற்றோர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 12 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

2018 - 2019


பெண்ணியக்குழு செயல்பாடுகள்
“உழைக்க நேரத்தை வகுத்துக் கொள்
அது வெற்றியின் விலை” – என்பதைப் போன்று
உழைத்த மக்கள் வீட்டினை அழகுபடுத்துதல் என்ற முறையைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற நோக்கோடு, கிராம மக்கள் கண்மாய் வெட்டுவேலை முடிந்து ஓய்வு எடுக்கும் நேரத்தில் பெண்ணியக்குழுவின் மூலம் பயனுள்ள ஒன்றை கற்றுத்தர வேண்டி.
25.09.18 அன்று எம் இதயா மகளிர் கல்லூரியின் பெண்ணிகள் குழுவின் சார்பாக போரடைப்பு, வெள்ளிக்கட்டி கிராம மக்களுக்கு கைவினைப் பொருட்கள் கற்றுக்கொடுத்தல் என்ற நோக்கோடு பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி. அ.சேவியர் ராணி மற்றும் பெண்ணியக்குழு மாணவிகளின் தலைவி.காளீஸ்வரியோடு நவீன ஆடை அலங்காரத் துறை மாணவிகள் மூவர் சென்றோம்.
அச்சமயம் அங்கு மரத்தடியில் கூடியிருந்த மக்களை ஒன்றிணைத்து உடைகளில் வர்ணம் கொடுத்தல், வீட்டு அலங்காரப் பொருள்கள் செய்தல் போன்ற கைவினைப் பொருட்கள் செய்தல் பற்றி கற்றுக் கொடுத்தனர். மக்களும் ஆர்வமுடன் செய்து கற்றனர்.

 

 

2018-2019
பெண்ணியக்குழு செயல்பாடுகள்
“கைத்தொழில் ஒன்னைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
என்ற வரிகளை வாழ்வாக்கும் விதமாக இதயா மகளிர் கல்லூரியின் பெண்ணியக்குழுவின் சார்பாக கோபாலபுரம் கிராமமக்களுக்கு கைவினை பொருள்கள் கற்றுக் கொடுக்கும் கோணத்தில் 06.07.18 அன்று காலை 11.30 மணியளவில் பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர்
திருமதி.அ.சேவியர் ராணி மற்றும் திருமதி.மு.சங்கீதா தலைமையில் ஐந்து மாணவிகள் களம் இறங்கினர்.
அச்சமயத்தில் அங்கு கூடியிருந்த மக்களுக்கு உடை(பெயிண்டிங்)) பூ வேலைப்பாடுகள் கற்றுக்கொடுத்தனர்; சுமார் 25 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மருத்துவ விழிப்புணர்வு நிகழ்வு
21.08.2018 அன்று பெண்ணியக்குழு, நாட்டு நலப்பணித்திட்டக்குழு, தொழில் முனைவோர் மேம்பாட்டுக்குழு, ரோட்டரி குழு மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக்குழு ஆகிய குழுக்கள் நிகழ்வானது கல்லூரியின் வெளிஅரங்கில் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தேவகோட்டை அன்பு ராமசந்திரா மருத்துவமனை மகப்பேறு சிறப்;பு மருத்துவர் எம்.பொற்செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “வருமுன் காப்போம் நோய் அணுகாமல் தடுப்போம்” என்ற வகையில் மாணவிகள் உடல் நலம் பேணக்கூடிய வழிமுறைகளையும் உணவுமுறைகள் உட்கொள்ளகூடிய முறைகளையும் பயன்தரும் வகையில் எடுத்துக்கூறினார்.
சிறப்பு விருந்தினரை வரவேற்கும் விதமாக இயற்பியல் துறை மாணவி மஹாகீர்த்தி வரவேற்புரை நல்க, வணிகம் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைத்தலைவி முனைவர். ஆர்.விஐயவெட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் அனைத்துப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வணிகம் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவி நன்றியுரை பாத்திமா நன்றி நவில, இறுதியாக நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.
வேலைக்கு செல்வோர் கணக்கெடுப்பு
17.10.2018 அன்று இதயா மகளிர் கல்லூரியின் பெண்ணியக்குழு சார்பாக நாகமத்தி கிராம மக்கனைச் சந்தித்து படித்துவிட்டு வேலையின்றி இருக்கும், தையல் தெரிந்த பெண்களை கேட்டறிந்து வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்கிறார்களா என வினவினோம்.
அவ்வாறு உள்ள நபர்களை தேர்வு செய்து காளையார் கோவில் அருகில் உள்ள காயாஓடையில் இயங்கும் அம்மையப்பர் தையல் துணி ஏற்றுமதி தொழிற்சாலையில் பணியை அமைத்துக்கொடுத்தல் நோக்கோடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அச்சமயம் சந்தித்த பெண்களின் தொலைபேசி எண் வாங்கப்பட்டது. அனைவரும் வீட்டில் உள்ள குடும்பத் தலைவரை கேட்டு பதில் கூறுவதாக கூறினார்கள். அத்தொழிற்சாலையில் ஒரு மாத காலப் பயிற்சி அளிக்கப்படும். அந்த நாட்களில் 3500 சம்பளமாக வழங்குவார்கள் என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டது.
தைராய்டு விழிப்புணர்வு நிகழ்வு
23.01.2019 அன்று இதயாவின் பெண்ணியக்குழு சார்பாக மாதச் செய்ல்பாடு நிகழ்வாக சொக்கநாதபுரம், போரடைப்பு ஆகிய கிராம மக்களிடம் தைராய்டு விழிப்புணர்வு நிகழ்வுநடைபெற்றது.
அந்நிகழ்வில் காரைக்குடி கவிதா மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் நியூ ராஐ; இரத்தப்பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர். திருவாளர். வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி.அ.சேவியர்ராணி அவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டது.
குடிசைத் தொழில் கற்றுக்கொடுத்தல்
26.02.2019 அன்று காலை 11.30 மணியளவில் இதயா மகளிர் கல்லூரியின் பெண்ணியக்குழு சார்பாக குடிசைத் தொழில் கற்றுக்கொடுத்தல் என்ற நோக்கோடு எம்.கல்லூரியைச் சுற்றியுள்ள கோபாலபுரம் நாகமத்தி மற்றும் போரடைப்பு கிராம மக்களுக்கு காளையார் கோவிலைச் சார்ந்த திருமதி.மகேஸ்வரி (தொழில் முனைவர்) அவர்கள் தலைமையில் கற்றுக்கொடுப்பட்டது. மக்களும் ஆர்வமுடன் செய்து கற்றனர்.

மகளிர் தின விழா
09.03.19 அன்று இதயா மகளிர் கல்;லூரி சார்பாக மகளிர் தின விழா பொண்டாட்டமானது காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இறை வணக்கத்துடன் இனிதே ஆரம்பமானது. பட்டறைத்திரைப்பட இயக்குநர் பீட்டர் ஆல்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவ்விழாவில் வேதியல்துறைத் தலைவி. பேராசிரியை. செல்வி. கௌரி வரவேற்புரை நல்கினார்.
எம் கல்லூரி முதல்வர் முனைவர். அருட்சகோதரி. Nஐhதிமேரி அவர்கள் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார். துணைமுதல்வர். முனைவர். அருட்சகோதரி. சபின் மேரி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.
அச்சமயம் எம் கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையுரை ஆற்ற. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்கள் மாணவிகளிடம் நாம் இவ்வுலகத்தினை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும,; பெற்றோரிடம் மனம்விட்டுபேசவேண்டிய இன்றியமையாமை பற்றியும், நமது எண்ணங்கள் உயர்வானதாய் இருந்தால் நாமும் உயர்வடைய முடியும் என்ற சிந்தனை விதைகளையும் விதைத்தார்.
அதனைத் தொடர்ந்து எம் கல்லூரியில் செயல்படுகின்ற கூடுதல் கல்வி நடவடிக்கைகளில் பயின்ற அனைத்து மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மற்றும் எம் கல்லூரி முதல்வரால் சான்றிதல் வழங்கப்பட்டது. மேலும் இன்பமேளா நிகழ்சில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
எம் இதயா கல்லூரியின் சுற்றுவட்டார ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பெண்ணியக்குழு சார்பாக மூன்று குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
1. சந்திரன் - லதா –மகள் திருமணத்திற்கு பாத்திரம்,குத்துவிளக்கு எடுத்து வைக்கப்பட்டது.
2. கௌரி – சங்கர் - குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக தேநீர்க்குடவை வழங்கப்பட்டது.
3. கண்ணத்தாள் - செல்வம் - மகள் படிப்பிற்கான கல்வித்தொகை வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் இயக்கியுள்ள பெண்கள் பற்றிய விழிப்புணர்வு படத்தின் சிறுகாட்சிகள் கல்லூரியின் உள் அரங்கின் திரையில் காண்பிக்கப்பட்டது. அந்நிகழ்வில் பீட்டர் இக்னேசியஸ் (பட்டறைத் திரைப்படக்குழு), மற்றும் ஓய்வுபெற்ற சிறப்பு விருந்தினர் இயங்கியுள்ள பெண்கள் பற்றிய விழிப்புணர்வு படத்தின் சிறுகாட்சிகள் கல்லூயின் உள் அரங்கின் திரையில் காண்பிக்கப்பட்டது. அந்நிகழ்வில் பீட்டர் இக்னேசியஸ் (பட்டறைத் திரைப்படக்குழு), மற்றும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியரும், தற்சமயம் நற்செய்திப் பணியாளருமாகிய அருட்சகோதரி. சசிகலா அவர்களும், எம் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்புச்செய்தனர்.
இறுதியாக பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர். திருமதி.அ.சேவியர்ராணி நன்றி நவில, நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.

 

2019 - 2020

ஒருங்கிணைப்புக் கூட்டம் 18.07.19

இதயாவின் பெண்ணியக்குழுவின் சார்பாக ஒருங்கிணைப்புக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக முன்னாள் பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி அ.சேவியர்ராணி கலந்து கொண்டு “பெண்ணியக்குழுவின் பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம்” குறித்து விளக்கினார். வரவேற்புரை தமிழ்த்துறைப் பேராசிரியை திருமதி P. கோகுல வர்த்திணி அவர்களால் நல்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து தொடக்கவுரை தமிழ்த்துறைத் தலைவர் திருமதி க.வைரலெட்சுமி அவர்களால் வழங்கப்பட்டது. மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பெண்களின் முக்கியத்துவம் குறித்த கவிதைää விழிப்புணர்வு பாடல் போன்றவையும்ää 2015 முதல் 2019 வரையிலான பெண்ணியக்குழுவின் செயலபாடுகள் அனைத்தும் விளக்கப்படம் மூலமாகவும் நிகழ்த்தப்பட்டன. நன்றியுரை பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி ம.சோனியா அவர்களால் வழங்கப்பட்டது. இறுதியாக நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

வீட்டு உபயோகப் பொருட்கள் கற்றுக் கொடுத்தல் 14.08.2019

“உழைக்க நேரத்தை வகுத்துக் கொள் அதுவே வெற்றியின் திறவுகோள்”
என்பதைப் போன்று உழைக்கும் மக்கள் வீட்டினை அழகுபடுத்தும் முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடுää கிராமப்புற மக்கள் கண்மாய் வெட்டுவேலை முடிந்து ஓய்வு எடுக்கும் நேரத்தில் பெண்ணியக்குழுவின் மூலம் பயனுள்ள ஒன்றை கற்றுத்தர வேண்டிää 14.08.19 அன்று எம் இதயா மகளிர் கல்லூரியினää; பெண்ணியக் குழுவினரின் சார்பாக கோபாலபுரம்ää நாகமத்தி ஆகிய கிராம மக்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் கற்றுக்கொடுத்தல் வேண்டி பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி ம.சோனியா மற்றும் பெண்ணியக்குழு மாணவிகளின் தலைவி பிரதீபா இவர்களின் தலைமையில் ஐந்து மாணவிகள் கொண்ட குழுவினர் சென்றனர். அச்சமயம் அங்கு மரத்தடியில் கூடியிருந்த மக்களை ஒன்றிணைத்து வீட்டு அலங்காரப் பொருட்கள் செய்தல் பற்றிக் கற்றுக் கொடுத்தனர். மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு கற்றுக் கொண்டனர்.

வேலையின்றி இருப்போர் கணக்கெடுப்பு 20.09.2019

20.09.19 அன்று இதயா மகளிர் கல்லூரியின் பெண்ணியக்குழுவினரின் சார்பாக நாகமத்தி கிராம மக்களைச் சந்தித்துää படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் மற்றும் தையல் தெரிந்த பெண்கள் விபரம் பற்றி கேட்டறிந்து வேலைக்கு வெளியில் செல்வதாக இருக்கிறார்களா என வினவிää அவ்வாறு உள்ள நபர்களை தேர்வு செய்து காளையார் கோவில் அருகில் உள்ள காயா ஓடையில் இயங்கும் அம்மையப்பர் தையல் துணி ஏற்றுமதி தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்பவற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இத்தொழிற்சாலையில் 1 மாதம் பயிற்சி அளிக்கப்பட்ட பின்பு 3ää500 சம்பளமாக வழங்குவார்கள் என்ற செய்தியையும்ää அவர்களிடம் கூறிய பின்புää அச்சமயம் அங்கு சந்தித்த பெண்களின் தொலைபேசி எண்கள் வாங்கப்பட்டது. அனைவரும் வீட்டில் உள்ள குடும்பத் தலைவரை கேட்டு பதில் கூறுவதாக தெரிவத்தார்கள். இந்நிகழ்வில் இக்குழுவைச் சார்ந்த ஐந்து மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளரான திருமதி ம.சோனியா அவர்களால் வழங்கப்பட்டது.

ஆதரவற்றோர்களுக்கு உதவுதல் 20.12.2019

இதயாவின் பெண்ணியக் குழுவினரின் சார்பாக “ஆதரவற்றோர்களுக்கு உதவுதல்” என்ற நோக்கோடு மாணவிகளிடம் கலந்தாலோசனை செய்துää லெவே முதியோர் இல்லத்தில் இருக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்றைய தினம் பொறுப்பாசிரியர் திருமதி ம.சோனியா மற்றும் திருமதி மோ. மஞ்சு அருமைத்தாட்சி ஆகியோர்களின் தலைமையில் நண்பகல் 12.00 மணியளவில் ஆரோக்கியா மருத்துவமனை அருகிலுள்ள லெவே முதியோர் இல்லம் சென்று அங்குள்ளவர்களைச் சந்தித்துää ஒவ்வொருடைய நலன் முறைகள் குறித்தும் விசாரித்து அறிந்தனர். அதன் பின்பு அவர்களுடைய இருப்பிடங்களைத் தூய்மை செய்தல் மற்றும் அவர்களுக்கு தங்களால் இயன்ற பொருட்களான (குளியல் சோப்ää சலவை சோப்ää பற்பசைää பல் துலக்கும் தூரிகை மற்றும் சிற்றுண்டிகள்) போன்றவைகள் வழங்கப்பட்டது.

கோலப்போட்டி 13.01.2020

பெண்ணியக் குழுவினரின் சார்பாக கிராமப்புற பெண்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில்ää தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டுää நமது கல்லூரிக்கு அருகிலுள்ள கோபாலபுரம் கிராமத்தில் “கோலப்போட்டி” நடத்தப்பட்டது. இப்போட்டியில் 15 பெண்கள் கலந்து கொண்டு தங்களது திறன்களை வெளிக் கொணர்ந்தனர். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உயர்திரு பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டுää வெற்றி பெற்ற பெண்களுக்கு முதலாம்ää இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். இவற்றிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர்களான திருமதி ம.சோனியா மற்றும் திருமதி மோ.மஞ்சுஅருமைத்தாட்சி ஆகியோர்களால் செய்யப்பட்டுத

மகளிர் தின விழா 07.03.2020

இதயா மகளிர் கல்லூரியின் பெண்ணியக்குழு மற்றும் பிற குழுவினர்களின் சார்பாக மகளிர் தின விழா கல்லூரிக்கு அருகேயுள்ள செங்கற்கோவில் கிராமத்தில் இறைவழிபாட்டுடன் துவங்கியது. இவ்விழாவினை முன்னிலை ஏற்று கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சசோதரி ஊ. ஜோதிமேரி அவர்கள் துவங்கி வைக்கää விழாவின் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் கண்ணுச்சாமி கார்த்திகேயன் ஆ.னு.இ அவர்கள் மருத்துவ அலுவலர்ää நகர்நலமையம்ää காரைக்குடி மற்றும் உயர்திரு சுப்பையாää ஊராட்சி மன்றத் தலைவர்ää வெள்ளிகட்டி ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களை வரவேற்கும் வகையில் தமிழ்த்துறைத் தலைவர் திருமதி கா.வைரலெட்சுமி அவர்கள் வரவேற்புரை நல்கினார். இவ்வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தமது சிறப்புரையில் கடவுள் படைப்புகளுள் அரிய படைப்பு பெண்மைதான். இப்பெண்களாகிய நீங்கள் அனைவரும் சமூகத்தில் சிறந்ததொரு சாதனையாளர்களாக உருவாக வேன்டும் என்று வாழ்த்தினார். இவரைத் தொடர்ந்து உயர்திரு சுப்பையா அவர்கள் தமது உரையில் பெண்கள் அனைவரும் வீரத்தோடும்ää விவேகத்தோடும் செயல்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். பின்னர் இக்கிராமப் பெண்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கோலப்போட்டிää இசைநாற்காலிää கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பெற்று வெற்றி பெற்றோர்களுக்கு பரிசுகள் சிறப்பு விருந்தினர் அவர்களால் வழங்கபப்பட்டது. இப்போட்டிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் கலந்து கொண்டு தங்களது திறன்களை வெளிக்கொணர்ந்தனர். கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் இடையிடையே கலை நிகழ்சிசிகள் நடத்தப்பட்டன. மேலும் இந்நிகழ்வில் 250 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். நன்றியுரை பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளார் திருமதி ம.சோனியா அவர்களால் வழங்கப்பட்டது. இறுதியாக நாட்டுப்பண்ணுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.